ஜெகமதி கலைக்கூடம்
இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, அதன் பண்பாட்டுத் தன்மை பற்றிப் பெருமிதம் கொள்ள முடியும். சமூகத்தில் பல செய்தி ஊடகங்களினால் ஏற்பட்டுள்ள எதிர்மறைப் பாதிப்பு சிறு குழந்தைகள் நடந்துகொள்ளும் முறையில்கூட விரும்பத்தகாத விளைவைக் கொடுத்துள்ளது. பலரின் பொதுவான நலனைப் பற்றிப் பொருட்படுத்தாத்தன்மை, எந்தப் பிரச்சினையையும் தன்னலத்துடன் அணுகும் முறை, மிக அதிகமான நுகர்வுக்கலாச்சாரத் தன்மை ஆகியவை நம் வாழ்க்கையில் ஊடுருவி வீடுகளில் உள்ள முதியோர்கள் புறக்கணிக்கப்படும் நிலை, குடும்பங்கள் அதிகமாகப் பிரிவடையும் நிலை மற்றும் தற்காலச் சமூகம் பண்பாட்டு மதிப்புக்களை சிதைப்பதால் ஏற்படும் பிற தீமைகள் கவலைக்குரியன
சிறப்பான இந்திய, தமிழ்ப் பண்பாட்டைப் போற்றி வளர்த்து அதை அடுத்த தலைமுறைக்கும் அளிக்கும் வகையில் அறக்கட்டளை செயல்படும்; இதையொட்டி இளம் உள்ளங்களில் சரியான மதிப்பீடுகள் பொதிய உதவும்; அதேபோல் ஒரு பகுதியின் மறைந்து கொண்டிருக்கும் கலை மற்றும் கைத்தொழில்களையும் நிலைநிறுத்தப் பிரச்சாரம் செய்யும். தன் பண்பாட்டுப் பணியை அறக்கட்டளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. நம் அரிய பண்பாடு மற்றும் பெரும் தலைவர்களின் அளிப்புக்களை உயர்த்திக் காட்டும் வகையில் அறக்கட்டளை ஆவணப்படங்களைத் தயாரித்து ஒளிபரப்பியுள்ளது.
மற்றவற்றுடன், அறக்கட்டளை கீழ்க்கண்டவற்றிற்கும் முயலும்:

- நம் இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ள பல வரலாற்றுச் சான்றுகளை ஆவணப்படுத்துதல்
- மக்களிடையே சமூக விழிப்புணர்வைத் தோற்றுவித்தல்
- சமூகத்திற்குப் புத்துயிர்ப்பு அளித்தல்
- இந்தியப் பண்பாட்டுக் கலைகளை மக்களிடையே செல்வாக்குப் பெறச் செய்தல்.
செய்திகள்