கல்விப் பிரிவு

அமைதி இல்லம் - சென்னை



ஜெகமதி கல்வி அறக்கட்டளை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது அனைவரும் அறிந்ததே.அவர்களின் உதவிக்கரம் சென்னை வில்லிவாக்கத்தில் இருக்கும் அமைதி இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கும் நீண்டதில் ஐயமில்லை. இந்த அமைப்பினால் பயன்பெற்ற ஆண், பெண் இருபாலரின் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

B.C. சேகர்
பெயர்: B.C. சேகர்
வயது: 17 years / 20.07.1993
XI standard
B.C. சேகர் 20/7/1993 ம் ஆண்டு பிறந்துள்ளார். பதினேழு வயது பூர்த்தியாகும் இவர் தற்போது பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். தனது தந்தை இறந்த காரணத்தால், இவரது தாயார் குடும்ப வறுமை காரணமாக, 2006ம் ஆண்டு இவரை அமைதி இல்லத்தில் சேர்த்துவிட்டார்.
B.ஜெபா
பெயர்: B.ஜெபா
வயது: 14 years / 31.01.1996
IX standard
B.ஜெபா 31 /1 /1996ல் பிறந்தார்.14 வயதாகும் இவர் படித்துக் கொண்டிருப்பது ஒன்பதாம் வகுப்பு.இவரது தந்தையின் மறைவுக்குப் பின் , கிராம விவசாய கூலித் தொழிலாநியான இவரது தாய் , குடும்ப வறுமை காரணமாக , 2006 ம் ஆண்டு அமைதி இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தார்.
U. தேவப்பிரியா
பெயர்: U. தேவப்பிரியா
வயது: 13 years / 15.06.1997
VIII standard
U. தேவப்பிரியா பிறந்த தேதி 15 /6 /1997 எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவரது வயது 13. இவரது தந்தை, இவரது தாயைக் கொன்ற காரணத்தால், சிறையில் வாழும் நிலை ஏற்பட்டது. உறவினர்கள் யாரும் உதவி செய்யாத நிலையில், சமுக ஆர்வலர் ஒருவரின் உதவியால் இப்பெண் குழந்தை அமைதி இல்லத்துக்கு வந்து சேர்ந்த வருடம் 2002.
S. சத்யா
பெயர்: S. சத்யா
வயது: 14 years / 17.05.1996
VIII standard
S. சத்யா பிறந்த தேதி 17/5/1996 . 14 வயது பூர்த்தியாகும் இவர் படித்துக் கொண்டிருப்பது எட்டாம் வகுப்பு. தாய், தந்தை இருவரும் இறந்துவிட்ட நிலையில், யாருமில்லாது நின்ற இவரை சமுக ஆர்வலர் ஒருவர் 2008ம் ஆண்டு அமைதி இல்லத்தில் கொண்டு சேர்த்தார்.
S. கஸ்தூரி
பெயர்: S. கஸ்தூரி
வயது: 15 years/ 04.06.1996
XI standard
S. கஸ்தூரி 04/6/1996 ம் ஆண்டு பிறந்தார். 15 வயதாகும் இவர் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். தனது தந்தை கொடிய நோயால் இறந்து, தனது தாய் நோயாளியாக அவஸ்தைப்படும் குடும்ப சூழலில் இருந்த இவரை சமுக ஆர்வலர் ஒருவர் 2005ம் ஆண்டு அமைதி இல்லத்தில் கொண்டு சேர்த்தார்.
இருஞ்சிறை அரசாங்க உயர் நிலைப்பள்ளி
23.1.2011 ஆம் நாள் (இந்தியா, தமிழ்நாட்டு அரசாங்கத்தின்) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களால் தொடங்கப் பெற்ற அரசாங்க உயர் நிலைப்பள்ளிக்கு 4 ஏக்கர்கள் நிலம் அளிக்கப்பட்டது. இப்பள்ளி விருதுநகர்மாவட்டத்தில் திருச்சுழி வட்டத்தில் இருஞ்சிறை கிராமத்தில் உள்ளது.
திருமதி மேரி ஆஞ்சலியா
அக்டோபர் – 2010: இவருக்கு BCA பட்டப்படிப்பிற்காக ரூ.10, 000/ நன்கொடையாக அளிக்கப்பட்டது.
 
திரு. ஜோசப்
அக்டோபர் 2010: திரு. ஜோசப்பிற்கு அவருடைய MBA படிப்பிற்காக ரூ.10,000/ நன்கொடையாக அளிக்கப்பட்டது
 
தேசிய இளநிலை டென்னிகாயிட் போட்டி
டிசம்பர்-2008; இந்தியா, தமிழ்நாடு, மதுரை அருகே விரகனூரில் நடைபெற்ற வேலம்மாள் 23 ஆம் மாணவ, மாணவியருக்கான இளநிலை தேசிய டென்னிகாயிட் போட்டிக்குப் புரவலராகச் செயல்பட்ட
 
அருள்மிகு சுந்தரேச மேல் நிலைப் பள்ளி
ஜனவரி – 2007; மாணவர்களுக்குப் பள்ளிச்சீருடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. பள்ளிக் கட்டடத்திற்கு வெள்ளை பூசுதல் மற்றும் பராமரிப்பிற்கான செலவுகளும் ஏற்கப்பட்டன.
திரு. சின்ன முத்து
மாணவர் திரு. சின்னமுத்துவின் பட்டப்படிப்பிற்காகும் செலவுகள் அனைத்தையும் ஏற்க ஜெகமதி கல்வி அறக்கட்டளை பொறுப்பேற்றுள்ளது. அவர் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் படிக்கிறார்.
திரு. தனபால் த/பெ திரு. வ. பால்ராஜ்
2012 : இவருக்கு கட்டுமான துறையில் பட்டய படிப்பிற்காக 20,000 ரூ நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

செய்திகள்
' தமிழர் பண்பாட்டு விழா ' காட்சியகம் காண இங்கே கிளிக் செய்யவும்